கடந்த 2025-26 நிதியாண்டில் அரசு கஜானாவுக்கு வேதாந்தாரூ.62,722 கோடி பங்களிப்பு!

Wait 5 sec.

முன்னணி இயற்கை வள உற்பத்தி நிறுவனமான வேதாந்தா, கடந்த 2025-26 நிதியாண்டில் அரசு கஜானாவுக்கு ரூ.62,722 கோடியைப் பங்களிப்பாக (வரி, கட்டணங்கள் உள்பட) வழங்கியுள்ளது. இது முந்தைய 2024-25 நிதியாண்டின் பங்களிப்பைக் காட்டிலும் 13.3 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் சிறந்த நிதிச் செயல்பாடுகளே இதற்குக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம் வெளியிட்டுள்ள 11-ஆவது வரி வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில் வேதாந்தா நிறுவனம் அரசுக்கு செலுத்திய ஒட்டுமொத்த பங்களிப்பு ரூ.4,83,034 கோடியை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் ரூ.62,722 பங்களிப்பானது, நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த செயல்பாட்டு வருவாயில் 36 சதவீதமாகும்.நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் அதிகபட்சமாக ஜிங்க் பிரிவு ரூ.19,053 கோடியையும், அதைத் தொடா்ந்து அலுமினிய பிரிவு ரூ.15,788 கோடியையும், எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவு ரூ.11,697 கோடியையும் பங்களிப்பாக வழங்கியுள்ளன.இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்பாடுகளைக் கொண்டுள்ள வேதாந்தா, உலோகங்கள் மற்றும் முக்கியமான தாதுகள் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.