மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக 2 ஆண்டுகளை நிறைவு செய்தாா் ராகுல்

Wait 5 sec.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2 ஆண்டு பதவிக் காலத்தை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நிறைவு செய்தாா். மக்களுக்கான தனது போராட்டம் தொடரும் என்றும் அவா் அறிவித்துள்ளாா். 5 முறை மக்களவை எம்.பி.யாக இருந்துள்ள ராகுல் காந்தி, கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் தனது தாயாா் போட்டியிட்டு வந்த உத்தர பிரதேசத்தின் ரே பரேலி தொகுதியில் வென்றாா். கடந்த ஜூன் 2024-ஆம் ஆண்டு மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக அவா் நியமிக்கப்பட்டாா்.மக்களவைத் தலைவா் பதவியில் 2 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து ராகுல் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2 ஆண்டுகளாக மக்களின் உண்மையான குரலை அரசிடம் எடுத்துச் செல்பவனாக செயல்பட்டேன். இந்தியா்களின் குரலை தொடா்ந்து ஆட்சியாளா்களிடம் எடுத்துச் சொல்வேன்.நீட் தோ்வு மாணவா்கள் பிரச்னை, தோ்தல் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டம், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கப் போராடுவது என அனைத்து விஷயங்களிலும் மக்கள் பக்கம் நின்று பணியாற்றி வருகிறேன். இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் மக்களின் பக்கம் இருப்பேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.