ராமேசுவரம்: ராமேசுவரம் துறைமுகத்தில் 50 மீட்டர் வரை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) கடல் உள்வாங்கியது. ராமநாதபுரம் மாவட்டம்,மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிகளவில் காற்று வீசி வருகிறது. இதனால்,ராமேசுவரம் துறைமுகத்தில் 50 மீட்டர் வரை கடல் உள்ளாங்கியது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த சிறிய படகுகள் மணலில் சிக்கிக்கொண்டது. இதனைதொடர்ந்து, மாலையில் கடல் மட்டம் உயர்ந்தால் மட்டுமே படகை மீட்க முடியும் என்பதால் மீனவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் போது இந்த பகுதியில் கடல் உள்வாங்கி விடுவதாகவும் இதனால் இந்த பகுதியில் தூர் வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது!The sea receded by up to 50 meters at the Rameswaram harbor on Sunday (June 28).