திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர் விடுமுறையால் பக்தர்களின் நலன்கருதி, நாளை ஸ்ரீவாணி, விஐபி தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.தொடர் விடுமுறை காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர். இதனால், பக்தர்களின் நலன்கருதி, நாள்தோறும் இணையவழியில் முன்பதிவு செய்து வழங்கப்படும் 800 ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் நாளை (ஜூன் 29) ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், விஐபி பிரேக் தரிசனங்களும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், விஐபி தரிசனத்துக்கான எந்தவொரு பரிந்துரைக் கடிதங்களும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.ஆகையால், இந்த மாற்றங்களைக் கருத்தில்கொண்டு, திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் தங்களின் ஆன்மிக பயணத்தைத் திட்டமிடுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.தேவிகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயில் தேரோட்டம்!TTD cancels VIP break and Srivani Darshan at Tirumala as rush spikes