விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர். காயமடைந்த தாய், மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மதுரை பழங்காநத்தம், திருவள்ளுவர் நகர் பாரதிதாசன் பிரதானச்சாலையைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் செல்லபாண்டி(55). கார் ஓட்டுநராக உள்ளார். இவரது காரில், மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுப்பிள்ளை மகன் செல்வம் (63), அவரது மனைவி செல்வி (55), மகன் பிரவீன்(30) உறவினர் மு. கவிதா (48) ஆகியோர் சென்னையில் நடைபெறும் திருமண நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர்.இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அடுத்துள்ள பிடாகம் அருகே சென்றபோது, ஓட்டுநர் செல்லப்பாண்டி முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச்செல்ல முயன்றார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்திலிருந்து தடுப்புக்கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் கார் உருக்குலைந்த நிலையில் கார் ஓட்டுநர் செல்லபாண்டி மற்றும் காரில் பயணித்த செல்வம், இவரின் உறவினர் மு. கவிதா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். செல்வி, பிரவீன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர் .இந்த விபத்து குறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தி, விபத்தில் உயிரிழந்த 3 பேர்களின் சடலங்களையும் கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.விபத்தில் காயமடைந்தவர்கள் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது!Three people were killed in a road accident near Villupuram on Sunday morning. An injured mother and son were admitted to the hospital.