கால்பந்து உலகக் கோப்பையில் புதிய உலக சாதனை படைத்த மெஸ்ஸி!

Wait 5 sec.

ஜோர்டான் அணிக்கு எதிராக கோல் அடித்ததால், கால்பந்து உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி புதிய உலக சாதனை படைத்துள்ளார். லீக் சுற்றில் தனது கடைசி போட்டியில் ஆர்ஜென்டீனா ஜோர்டானுடன் டல்லாஸ் திடலில் மோதின. இந்தப் போட்டியில் 3-1 என ஆர்ஜென்டீனா வென்றது.இந்தப் போட்டியில் இரண்டாம் பாதியில் 60ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி களமிறங்கினார். 80ஆவது நிமிஷத்தில் ஃபிரி கிக்கில் அசத்தலான கோல் அடித்து அசத்தினார். இந்த கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸி கால்பந்து உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக ஏழு போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். மொத்தமாக, உலகக் கோப்பையில் அதிக கோல்கள் (19) அடித்தவர்கள் பட்டியலில் அவர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். முன்னதாக, பிரான்ஸின் ஜஸ்ட் ஃபான்டெயின், பிரேசிலின் ஜெய்ர்ஜின்ஹோ தொடர்ச்சியாக 6 போட்டிகளில் கோல் அடித்துள்ளார்கள்.WHAT A FREEKICK GOAL MESSI https://t.co/HLd0bzI0Ae pic.twitter.com/kfULFKLScI— m (@pedrizard) June 28, 2026Lionel Messi becomes the first player to score in seven consecutive #FIFAWorldCup games pic.twitter.com/pMhHcidn7H— FIFA World Cup (@FIFAWorldCup) June 28, 2026Messi becomes first to score in 7 straight World Cup games while extending goals record