கால்பந்து உலகக் கோப்பையில் குரேஷியா அணி கானாவை 2-1 என வீழ்த்தி, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கானா ஏற்கெனவே தேர்வாகியிருந்ததால், இந்தத் தோல்வி அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் பிலடெல்பியா திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 31ஆவது நிமிஷத்தில் குரேஷியாவின் பெட்டார் சுசிச் கோல் அடித்தார். பின்னர், டெரிக் லுக்காசென் 73ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார்.அணியின் கேப்டன் லூக்கா மாட்ரிச் 83ஆவது நிமிஷத்தில் தனக்குக் கிடைத்த கார்னர் கிக்கை 6 அடி பாக்ஸிற்குள் அடிக்க, நிக்கோலா வ்லாசிக் தலையால் கோல் அடித்து 2-1 என முன்னிலைப் பெற வைத்தார்கள்.இறுதியில் கானா எவ்வளவு முயன்றும் கோல் அடிக்க முடியாமல் சென்றது. 40 வயதான லூக்கா மாட்ரிச் மிகவும் வயதான வீரர் உலகக் கோப்பையில் அசிஸ்ட் செய்தவராக சாதனை படைத்துள்ளார்.A crucial victory to send Croatia to the Round of 32 #FIFAWorldCup— FIFA World Cup (@FIFAWorldCup) June 27, 2026Vlasic scores winner as Croatia beats Ghana 2-1 to reach World Cup knockout stage