வெனிசுவேலாவில் மீண்டும் நிலநடுக்கம்!

Wait 5 sec.

வெனிசுவேலா கடற்கரைக்கு அருகில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்றை ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (இஎம்எஸ்சி) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.வெனிசுவேலாவில் கடந்த புதன்கிழமை (ஜூன் 24) சக்தி வாய்ந்த இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என்ற அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் பல இடங்களில் வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்றும் ஐ.நா. தெரிவித்தது. இந்த சம்பவம் வெனிசுவேலா நாட்டையே கடுமையாக பாதித்துள்ளது. உலகின் பல நாடுகளும் நிவாரணப் பொருள்கள் அனுப்புதல், பேரிடர் மீட்புப் படையை அனுப்புதல் போன்ற பல வழிகளில் வெனிசுவேலாவுக்கு உதவிசெய்து வருகின்றன. கடந்த புதன்கிழமை தொடங்கிய மீட்புப் பணிகள் தற்போது வரை தொடர்ந்து கொண்டே உள்ளன. இதனால், பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டேதான் உள்ளன.இதைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்தது. மேலும், புதிதாக உருவான இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.இந்த நிலையில் ஏற்கெனவே, வெனிசுவேலா மக்கள் தங்களுடைய நாட்டை விட்டு இடம்பெயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.வெனிசுவேலா நிலநடுக்கம்: 1,000 பேர் பலி; 70 லட்சம் பேர் பாதிப்பு!The European-Mediterranean Seismological Centre (EMSC) has reported detecting a magnitude 5.6 earthquake near the coast of Venezuela on Sunday (June 28).