நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் தொடக்கம்!

Wait 5 sec.

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) தொடங்கி வைத்தார்.நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆனிப் பெருந்திருவிழாவின் 520-ஆவது திருத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சிறுகுறு தொழில்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து திருவிழாவை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று நெல்லை நெல்லையப்பர் அருள்மிகு காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆகும். இங்கு மாதம் தோறும் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆனிப் பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் இந்த திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் ஒவ்வொரு நாளும் காலை மாலை இரு வேளைகளிலும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். விழாவின் சிகர நிகழ்வான ஒன்பதாம் திருநாளான இன்று திருத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை ஒட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தேருக்கு எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சிறுகுறு தொழில்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர் பக்தர்களின் சிவாய நம, நமசிவாய கோஷங்கள் விண் அதிர தேர் நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்தது. சாமி தேரை அடுத்து அம்பாள் தேரும் இழுக்கப்பட்டது. தேர் திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணியில் நெல்லை மாநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1,500 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் விழா நடைபெறும் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு , மூன்று கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது!Tirunelveli: Minister for Hindu Religious and Charitable Endowments P.K. Sekar Babu inaugurated the Aani Chariot Festival of the Nellaiappar Temple on Sunday (June 28).