குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதல்வர் விஜய்!

Wait 5 sec.

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (ஜூன் 28) நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் சி. ஜோசப் விஜய், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்.மேலும், குழந்தைகளுக்கான பரிசுப் பொருள்களையும் முதல்வர் விஜய் வழங்கினார். இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டு தோறும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இரு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.இதன் பயனாக போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்ததால், கடந்த 6 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.அதன்படி, நிகழ் ஆண்டுக்கான போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.இந்த நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில், முதல்வர் சி. ஜோசப் விஜய், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்.இந்த முகாமில் 5 வயதுக்குள்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.As the polio vaccination drive is underway across Tamil Nadu today (June 28), Chief Minister C. Joseph Vijay administered polio drops to children.தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது!