தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யால் இன்று தொடக்கிவைக்கப்பட்ட புதிய அரசுப் பேருந்துகளில் ’தமிழ்நாடு’ என்ற பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசால் இயக்கப்படும் பேருந்துகளில் ‘அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். அதில், தமிழ்நாடு என்ற பெயரைச் சேர்த்து ’தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என பேருந்துகளின் கண்ணாடியில் அச்சிடுமாறு, கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.இந்த நிலையில், தமிழ்நாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில், இன்று முதல்முறையாக 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளை தொடக்கிவைக்கப்பட்டது.முதல்வர் விஜய்யால் தொடக்கிவைக்கப்பட்ட இந்த பேருந்துகளில் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.சென்னை, கோவை உள்பட 6 கோட்டங்களுக்காக 164 டீசல் பேருந்துகள், 136 சிஎன்ஜி பேருந்துகள் உள்பட 300 புதிய அரசுப் பேருந்துகள் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, புதிதாக தொடங்கப்பட்ட திருவல்லிக்கேணியில் இருந்து பெரம்பூர் செல்லும் 29 ஏ என்ற மாநகரப் பேருந்தில் முதல்வர் விஜய் பயணித்தது குறிப்பிடத்தக்கது.'Tamil Nadu' to be added back to government buses!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!