தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு 300 பேருந்துகளை தொடக்கி வைத்து அதில் ஒரு பேருந்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 25)பயணம் செய்தார். பயணத்தின்போது நடத்துனர் பேருந்து ஓட்டுவதையும் வெளியே இருந்த தொண்டர்கள் கையசைப்பதையும், வழித்தடப் பாதையையும் தனது செல்போனில் முதல்வர் விடியோ பதிவு செய்தார். இதுமட்டுமின்று பேருந்திற்குள் அமர்ந்திருந்த அனைவரையும் தனது செல்போனில் விடியோ பதிவு செய்தார். தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, கோவை உள்பட 6 கோட்டங்களுக்காக 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளை முதல்வர் சி. ஜோசப் விஜய் வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூர் (முதல்வர் விஜய் தொகுதி) செல்லும் 29ஏ பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துனருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். பின்னர் அந்த பேருந்தில் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். கலங்கரை விளக்கம் வரை அவர் பயணம் செய்தார்.பேருந்தில் விடியோ எடுத்தவாறு முதல்வர் விஜய்பயணத்தின்போது நடத்துனரிடம் டிக்கெட்டுக்கான காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணித்தார். பின்னர் நடந்த்துனரையும் தனது அருகே இருக்கையில் அமரவைத்துக்கொண்டு பேருந்தில் பயணம் செய்தார். பின்னர் முன் இருக்கைக்குச் சென்ற விஜய், தனது செல்போனில் ஒட்டுநரையும், பேருந்து வழித்தட சாலையையும் விடியோ பதிவு செய்தார். வெளியே சாலையோரம் நின்றுருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தவாறு, அதனையும் விடியோ பதிவு செய்தார்.300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!Chief Minister joseph Vijay records a video of the bus journey on his mobile phone