மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது : ரூ.2.47 லட்சம் கோடி கடன்!!

Wait 5 sec.

தமிழ்நாடு மின் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.2.47 லட்சம் கோடி கடன் இருப்பதாக, மின் வாரியத் துறையின் நிதிநிலை குறித்து வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2001ஆம் ஆண்டு முதலான நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டு அது தொடர்பான விவரங்களை வெளியிட்டு வருகிறார்.தமிழ்நாடு மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் தமிழக மின் துறை அமைச்சர், வெள்ளை அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையில் தமிழக மின்துறையின் நிதி நிலைமை எப்படி உள்ளது, மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.மின் வாரித்தின் உள்கட்டமைப்பு, மனிதவளம், தளவாடப் பொருள்கள், வருவாய், செலவினம் உள்ளிட்ட விவரங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. தற்போது மின் துறைக்கு ரூ.34,447 கோடி பற்றாக்குறை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருக்கும் முக்கிய விவரங்களில்..மின் துறையில் 65,921 காலிப் பணியிங்கள் உள்ளன.திமுக ஆட்சியில் சரியாக 9,136 பேர் ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், வெறும் 343 பேர் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.2006ஆம் ஆண்டு மின் துறையின் பற்றாக்குறை 8,335 கோடியாக இருந்த நிலையில், 2026ஆம் ஆண்டு ரூ.34,447 கோடி பற்றாக்குறையாக உள்ளது.பிற மாநிலங்களுக்கு இடையே பகிர்வு 4,248 மெகா வாட்2021 - 26 வரை மின் துறைக்கு ரூ.87,399 கோடி கடன் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.வரவு - செலவு நிலவரம்2001 - 06ஆம் ஆண்டு வரை வருவாய் 59,084 கோடி - செலவு ரூ.67,439 கோடி - பற்றாக்குறை ரூ.8,335 கோடி2006 - 2011 ம் ஆண்டு நிலவரப்படிவருவாய் ரூ.92,737 கோடி - செலவு - ரூ.1,28,200 கோடி - பற்றாக்குறை ரூ.35,463 கோடி2011 - 2016ஆம் ஆண்டு நிலவரப்படி வருவாய் 1,92,972 கோடி - செலவு 2,49,332 கோடி - பற்றாக்குறை ரூ.56,361 கோடி2021 - 2026ஆம் ஆண்டில் ரூ.4,07,000 கோடி வருவாய், ரூ.5,02,443 கோடி செலவு, ரூ.34,447 கோடி பற்றாக்குறை இருந்துள்ளது.