ஜூன் 25: தொடர்ந்து 3-வது நாளாகக் குறைந்த தங்கம் விலை! இன்று எவ்வளவு?

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது.சா்வதேச போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) அன்று சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,480-க்கும் ஒரு கிராம் ரூ. 13,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, நேற்று (ஜூன் 24) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,06,800-க்கும் கிராமுக்கு ரூ. 210 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,350-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, மூன்றாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து 1,05,120 -க்கும், கிராமுக்கு ரூ. 210 குறைந்து ஒரு கிராம் ரூ 13,140-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 230-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 10,000 குறைந்து ரூ. 2.30 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!The price of ornamental gold in Chennai dropped by ₹1,680 per sovereign on Thursday (June 25).