திமுக அரசு செய்யாததை தவெக அரசு செய்து வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (ஜூன் 25) தெரிவித்தார். முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்தநாளையொட்டி சென்னையில் அவரின் சிலைக்கு தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:திட்டங்களையும் கருத்துகளையும் கொள்கைகளையும் மட்டும்தான் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம். சட்டப்பேரவையில் இதுவரை ஆளும் கட்சியின் முதல்வர் பேசியது மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. எதிர்க்கட்சிகள் பேசியதையும் நேரலையில் கொண்டுவர வேண்டும். வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதால் தவெக இதைச் செய்கிறது.TVK is doing what the DMK did not minister Aadhav Arjuna