பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

Wait 5 sec.

கச்சா எண்ணெய் விலை சரிவால் பங்குச்சந்தைகள் இன்று(ஜூன் 25) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,391.07 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 517.46 புள்ளிகள் உயர்ந்து 77,482.22 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 151.75 புள்ளிகள் உயர்ந்து 24,173.40 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.56 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.36 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.நிஃப்டி 50 பங்குகளில் இன்டர்குளோப் ஏவியேஷன், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் லாபமடைந்துள்ளன.துறைவாரியாக நிஃப்டி ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்ந்தும் , பார்மா, உலோகங்கள் குறியீடுகள் சரிந்தும் வருகின்றன.பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.5% குறைந்து 73.34 டாலராக உள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.25 ஆக உள்ளது.Stock Market: Sensex gains 500 pts; Nifty tops 24,150