மகாராஷ்டிரத்தில் திருமண வீடு ஒன்றில், தங்கள் திருமணத்திற்கு வந்தவர்களுக்கான பரிசாக விபத்துக் காப்பீட்டை வழங்கியதை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். தங்கள் திருமணத்திற்கு வந்தவர்கள் மட்டுமின்றி, கிராமத்தைச் சேந்தவர்கள் என 3,500 பேருக்கு விபத்து காப்பீட்டை பரிசாக புதுமணத் தம்பதி வழங்கியுள்ளது. இதனை மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டினார். 135வது மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 28) உரையாற்றினார். அதில், இந்த தம்பதியின் செயலைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:''மகாராஷ்டிர மாநிலத்தின் பஹதூர்புரா கிராமத்தில் பெத்கர் குடும்பத் திருமணம், இந்தியாவுக்கே முன்னுதாரணமாக அமைந்துள்ளது. கடினமான சூழலில் ஒரு குடும்பத்துக்கு உதவும் வகையில் தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர். தங்கள் வீட்டுத் திருமணத்தில் பங்கேற்றவர்கள் உள்பட கிராம மக்கள் 3,500 பேருக்கு விபத்துக் காப்பீட்டை பரிசாக வழங்கியுள்ளனர். இதில், ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீட்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பிற்குப் பின்னால் உள்ள உணர்வு மிகவும் நெகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது'' எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியிருந்தார்.புதுமணத் தம்பதிபிரதமர் மோடியின் பாராட்டைத் தொடர்ந்து இது தொடர்பாக பேசிய புதுமணத் தம்பதி, ''எங்கள் திருமணத்தின்போது, கிராம மக்கள் அனைவருக்கும் விபத்துக் காப்பீட்டுத் திட்டங்களை நாங்கள் பரிசாக (return gift) வழங்கினோம். இந்தச் செய்தி பிரதமர் மோடியின் கவனத்திற்கும் சென்றடைந்தது, எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது திருமணம் செய்துகொள்ளவிருக்கும் அனைவருக்கும் எங்கள் வேண்டுகோள் என்னவென்றால், திருமணத்திற்காக வீண் செலவு செய்வதற்குப் பதிலாக, ஏதேனும் சமூகப் பணிகளை மேற்கொள்வது நாட்டிற்குப் பயனுள்ளதாக அமையும்'' எனக் குறிப்பிட்டனர். தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிCouple gifts ₹1 lakh accident insurance to wedding guests