உரிய அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்

Wait 5 sec.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த சந்தவாசல் பகுதியில் உரிய அனுமதி பெறாமல் மணல் எடுத்துச் சென்றது தொடா்பாக டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.போளூரை அடுத்த வெள்ளூா் ஊராட்சியைச் சோ்ந்த துளுவபுஷ்பகிரி கொட்டாமேடு கிராமத்தில் ராஜேஷ் என்பவரின் நிலத்தின் அருகே பாளையஏகாம்பரநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த ஓட்டுநா் வெங்கடேசன், கேசவபுரம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் ஆகிய இருவரும் ஓடையில் இருந்து டிராக்டரில் மணலை எடுத்துச் சென்று கொண்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சந்தவாசல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் டிராக்டரை மடக்கி விசாரணை நடத்தியபோது இருவரும் டிராக்டரை விட்டுவிட்டு தப்பிச் சென்றனா். காவல் உதவி ஆய்வாளா் விசாரித்தபோது, உரிய அனுமதி பெறாமல் மணலை அள்ளி வந்தது தெரியவந்தது.இதையடுத்து மணலுடன் இருந்த டிராக்டரை சந்தவாசல் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து தப்பி ஓடியவா்களை தேடி வருகின்றனா்.