திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்தனா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகே சீராக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 30 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 85, 582 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 44, 567 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.54 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.66 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 3,585 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றனா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. க