1934 ரீவைண்ட்! பிஃபா உலகக் கோப்பையை முதல்முறை வென்ற ஐரோப்பிய அணி - இத்தாலி!!

Wait 5 sec.

1934 ஆம் ஆண்டில் பிஃபா உலகக் கோப்பையில் ஐரோப்பிய அணியான இத்தாலி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.முதல் பிஃபா உலகக் கோப்பையைத் தொடர்ந்து இரண்டாவது உலகக்கோப்பைத் தொடர் ஐரோப்பிய கண்டத்தில் முதல்முறையாக நடத்தப்பட்ட முடிவு செய்யப்பட்டது. இந்தத் தொடரை நடத்தும் உரிமைக்காக இத்தாலியும் ஸ்வீடனும் கடுமையாகப் போட்டியிட்டன. ஸ்வீடன் விலகியதால், இத்தாலிக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. இந்தத் தொடர் 1934 ஆம் ஆண்டு மே 27 முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. லீக் சுற்று முறை இல்லாமல் நேரடியாக நாக்-அவுட் சுற்று முறையில் நடத்தப்பட்டு, வரலாற்றிலேயே முதன்முதலாக அணிகள் தகுதிச் சுற்று முறையில் இடம்பெற வேண்டும் என்ற விதி இந்தத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. 32 நாடுகள் போட்டியிட்டு, அதில் 16 அணிகள் மட்டுமே பிரதான சுற்றுக்குத் தகுதி பெற்றன. இதில், சுவாரசியமான நிகழ்வாக, நடத்திய நாடான இத்தாலியும் தகுதிச் சுற்று விளையாடி தேர்வாக வேண்டியிருந்தது. அதன்படியே, தகுதிச் சுற்றில் விளையாடி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.முந்தைய தொடருக்கு ஐரோப்பியாவைச் சேர்ந்த அணிகள் வர மறுத்ததால், அதற்குப் பழிவாங்கும் விதமாக 1930-ல் நடந்த முதல் உலகக் கோப்பையை வென்ற உருகுவே அணி இத்தாலிக்கு வர மறுத்து இந்தத் தொடரைப் புறக்கணித்தது. வரலாற்றில் நடப்பு சாம்பியன் பங்கேற்காத ஒரே தொடர் இதுமட்டுமே.கோப்பை வென்ற மகிழ்ச்சியில் இத்தாலிய அணி.முதல் தொடர் போன்று இல்லாமல், இந்தத் தொடரில் லீக் போட்டிகள் எதுவும் இல்லாமல், நேரடியாக 16 அணிகளும் நாக்-அவுட் முறையில் மோதிக்கொண்டன. வாழ்வா? சாவா? என அனைத்துப் போட்டிகளும் நடத்தப்பட்டன. ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து முதன்முதலாக எகிப்து அணி உலகக் கோப்பைக்குள் நுழைந்து வரலாறு படைத்தது.இறுதிப்போட்டிக்கு போட்டியை நடத்தும் இத்தாலி மற்றும் செக்கோஸ்லோவாக்கியா அணிகள் முன்னேறின. 1934 ஜூன் 10 ஆம் தேதி இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ள 'ஸ்டேடியோ நாசியோனாலே பிஎன்எஃப்' திடலில் 55,000 ரசிகர்கள் முன்னிலையில் இறுதிப் போட்டி நடைபெற்றது.போட்டியின் 71-வது நிமிடத்தில் செக்கோஸ்லோவாக்கியா அணி முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஆனால், ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் இத்தாலியின் ரைமுண்டோ ஓர்சி, கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார். வழக்கமான 90 நிமிடங்களில் ஆட்டம் 1-1 என சமன் ஆனதால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது இதுவே முதல்முறை. கூடுதல் நேரத்தின் 95-வது நிமிடத்தில் இத்தாலியின் ஆஞ்சலோ ஸ்கியாவியோ கோலடித்து இத்தாலிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இறுதியில் 2-1 என்ற கணக்கில் போட்டியை நடத்திய இத்தாலி அணி சாம்பியன் பட்டம் வென்று பிஃபா உலகக் கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையையும் பெற்றது.1930 ரீவைண்ட்! கால்பந்து திருவிழாவின் தொடக்கம்!!Italy had wanted to host World Cup 1930, and refused to participate when it was instead awarded to Uruguay. So when Italy were granted the right to host World Cup 1934, Uruguay pulled the same trick and didn’t travel to Europe.