மீண்டுமொரு வினாத்தாள் கசிவு: மகாராஷ்டிர ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு

Wait 5 sec.

மகாராஷ்டிரத்தில் நாளை ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், வினாத்தாள் கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரத்தில் ஞாயிற்றுக்கிழமையில் (ஜூன் 28) 1,028 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக காவல்துறையினருக்கு இன்று அதிகாலையில் தகவல் கிடைத்தது.இதனையடுத்து, தாணேவில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வினாத்தாளின் சில பகுதிகள் கசிவு உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக பலரும் விசாரணையில் வைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, நாளை தேர்வு நடைபெறவிருந்த நிலையில், தேர்வுக்கு ஒரு நாளுக்கு முன்னதாக தேர்வின் தேதி ஒத்திவைக்கப்பட்டது.மாநிலத்தில் நாளை நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு பணிபுரியும் ஆசிரியர்கள் உள்பட 4.28 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக 2 ஆண்டுகளை நிறைவு செய்தாா் ராகுல்Maharashtra TET 2026 exam postponed a day before test over paper leak