டெம்பேலே அடித்த ஹாட்ரிக் கோல்கள்! பிரான்ஸ் அதிரடி வெற்றி!

Wait 5 sec.

பிரான்ஸ் - நார்வே இடையே நடைபெற்ற போட்டியில் டெம்பேலே அடித்த ஹாட்ரிக் கோல்கள் மூலம் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது. ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் - நார்வே அணிகள் மோதிய போட்டி போஸ்டானில் நேற்று நடைபெற்றது. இரு அணிகளும் ஏற்கனவே நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டதால் புள்ளிப்பட்டியலில் யார் முதலிடம் பெறுவார் என்பது எதிர்பார்ப்பில் இருந்தது.அதேபோல, நட்சத்திர வீரர்களான கிலியன் எம்பாப்பே (பிரான்ஸ்) மற்றும் எர்லிங் ஹாலண்ட் (நார்வே) ஆகியோர் மோதும் போட்டி என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.நாக்-அவுட் சுற்று கடுமையாக இருக்கும் என்பதை அறிந்த நார்வே பயிற்சியாளர் ஸ்டாலே சோல்பக்கன், நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் மற்றும் மார்ட்டின் ஓடெகார்ட் ஆகியோரை மாற்று வீரர்களாக ஆட்டத்தில் இறக்காமல் அமரவைத்தார்.ஆட்டம் தொடங்கி 13-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த பிரான்ஸின் டெம்பேலே, 18-வது நிமிடத்தில் நார்வே வீரர்கள் தடுப்புகளை மீறி அடுத்த கோலை அடித்தார். முதல் பாதி முடிவதற்கு முன்பு 45-வது நிமிடத்தில் தனது 3-வது கோலை அடித்தார் டெம்பேலே. இதன்மூலம், 32 நிமிடங்களில் ஹாட்ரிக் கோல்களை அடித்து பிரான்ஸின் வெற்றிக்கு நங்கூரமிட்டார் டெம்பேலே.நார்வே அணி சற்றே தடுமாறினாலும் 42 -வது நிமிடத்தில் தெலோ ஆஸ்கார்ட் அடித்த கோல் மூலம் தனது கணக்கைத் தொடங்கியது. இரண்டாம் பகுதியில் தீவிரமான ஆட்டத்தை நார்வே வெளிப்படுத்தியது. ஆனால், 48-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் வீரர் ஜோர்கன் ஸ்ட்ராண்ட் தவறவிட்டார்.பின்னர், கூடுதல் நேரத்தின் முடிவில் பிரான்ஸின் பிராட்லி பார்கோலா அடித்த பந்தை தலையால் மோதி டெசிரே டூயே கோலாக்கினார். பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.1998-ஆம் ஆண்டு தனது சொந்த மண்ணில் கோப்பை வென்ற பின்னர் முதல்முறையாக ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற்றது பிரான்ஸ் அணி. இதற்கு, ஓஸ்மானே டெம்பெலெ அடித்த 3 கோல்கள் முக்கிய காரணமாக அமைந்தது. இதன்மூலம், உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டாவது அதிவேக ஹாட்ரிக் கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை டெம்பேலே படைத்தார். France won the match against Norway thanks to a hat-trick scored by Dembélé.ஆஃப்சைடாகிய ஈரானின் கடைசி நிமிட கோல்..! டிராவிலும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது எகிப்து!