முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த கேப்டன்கள் வரிசையில் இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

Wait 5 sec.

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி தோல்வியைத் தழுவியது.இந்தியா - அயர்லாந்து இடையேயான முதல் டி20 போட்டி நேற்று (ஜூன் 26) நடைபெற்றது. இந்தப் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.இதுவரை இந்திய அணிக்கு எதிராக 9 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அயர்லாந்து அணி, முதல் முறையாக வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக அண்மையில் நியமிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், கேப்டனாக அவரது முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்துள்ளார்.ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்பாக டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிரபல இந்திய வீரர்கள் பலரும் அவர்களது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளனர். அந்த வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்துள்ளார்.இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தவர்கள்விராட் கோலி - இங்கிலாந்துக்கு எதிராக, 2017ரிஷப் பந்த் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2022ஷுப்மன் கில் - ஜிம்பாப்வேவுக்கு எதிராக, 2024ஷ்ரேயாஸ் ஐயர் - அயர்லாந்துக்கு எதிராக, 2026The Indian team, led by Shreyas Iyer, suffered a defeat in the first T20 match against Ireland.ஸ்பெயினிடம் தோல்வி: கண்ணீருடன் வெளியேறியது 2 முறை உலகக் கோப்பை வென்ற உருகுவே!