28/32: நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 28 அணிகள்!

Wait 5 sec.

கால்பந்து உலகக் கோப்பையில் இதுவரை இந்திய நேரப்படி காலை 10.34 மணி வரைக்கும் 28 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன. இன்றைய நாளில், கடைசியாக செனகல் அணி 28ஆவது அணியாகத் தேர்வாகியுள்ளன.மொத்தம் 48 அணிகள் பங்குபெறும் இந்த உலகக் கோப்பையில் 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகின்றன. இதில் 16 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறுகின்றன. நேற்றுவரை (ஜூன் 26, காலை 9.40 மணி வரை) 15 அணிகள் தேர்வாகியிருந்தன. அதில் மெக்சிகோ, அமெரிக்கா, ஜெர்மனி, ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே, கொலம்பியா, ஸ்விட்சர்லாந்து, கனடா, பிரேசில், மொராக்கோ, போஸ்னியா, தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, ஈகுவாடர், நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், ஆஸ்திரேலியா தேர்வாகியிருந்தன. பின்னர், நடந்த போட்டிகளில் 13 அணிகள் தேர்வாகி அசத்தியுள்ளன. தற்போது 28 அணிகள் தேர்வாகியுள்ளன. மெக்சிகோ, அமெரிக்கா, ஜெர்மனி, ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே, கொலம்பியா, ஸ்விட்சர்லாந்து, கனடா, பிரேசில், மொராக்கோ, போஸ்னியா, தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, ஈகுவாடர், நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், கேப் வெர்டே, பராகுவே, எகிப்து, போர்ச்சுகல், இங்கிலாந்து, கானா, பெல்ஜியம், செனகல் ஆகிய அணிகள் தேர்வாகியுள்ளன. மீதம் 4 அணிகள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன. 2 முறை சாம்பியனான உருகுவே ஸ்பெயினிடம் தோல்வியுற்று வெளியேறியது.28/32 ✅#FIFAWorldCup #Qualified | @McDonalds pic.twitter.com/hOo5f1ZJmz— FIFA World Cup (@FIFAWorldCup) June 27, 20261930 ரீவைண்ட்! கால்பந்து திருவிழாவின் தொடக்கம்!!28/32: Fifa world cup knock out stage selected teams