இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிரண்ட் பிரிட்ஜில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்களும், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 354 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து, 84 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி 288 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணிக்கு 373 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், நியூசிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.இங்கிலாந்து அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 60 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, பென் டக்கெட் 36 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 30 ரன்களும் எடுத்தனர். ஹாரி ப்ரூக் 21 ரன்கள், கஸ் அட்கின்சன் 19 ரன்கள், ஜோ ரூட் 18 ரன்கள் எடுத்தனர்.நியூசிலாந்து தரப்பில் ஸகாரி ஃபோல்க்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நாதன் ஸ்மித் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பென் சியர்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.டேரில் மிட்செல் ஆட்ட நாயகனாகவும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நாதன் ஸ்மித் இருவரும் தொடர் நாயகன்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இங்கிலாந்து அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (ஜூன் 28) அறிவித்தார். அவரது கடைசி சர்வதேசப் போட்டியில் தோல்வியுடன் விடைபெற்றுள்ளார்.New Zealand achieved a magnificent victory by a margin of 160 runs in the third Test match against England.இரண்டு போட்டிகளிலும் சூர்யவன்ஷி விளையாடியிருக்க வேண்டும்: முன்னாள் கேப்டன்