தவெக நடத்தும் தோழமை கட்சிகளுக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்க ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீனுக்கும் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கும் திங்கள்கிழமை (ஜூன் 29) நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக தனிப் பெரும்பான்மைப்புக்குத் தேவையான 118 தொகுதிகள் இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியது.இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு ஆட்சி அமைத்தது.இதையடுத்து, தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் தவெக சார்பில் நடத்தப்படவுள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம் வருகிற ஜூலை 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விசிக தலைவர் திருமாவளவனுக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில், ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் மற்றும் மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோருக்கும் அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இன்று நேரில் சந்தித்து முறையாக அழைப்பு விடுத்தனர்.அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!IUML leader Kader Mohideen was personally invited on Monday (June 29) to participate in the thanksgiving meeting for alliance parties organized by TVK.