கடந்த ஆண்டை விட 36,000 லிட்டர் பால் விநியோகம் அதிகரிப்பு! ஆவின் விளக்கம்

Wait 5 sec.

சென்னை பெருநகரப் பகுதியில் பால் விநியோகம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஆவின் விளக்கம் அளித்துள்ளது.இது தொடர்பாக ஆவின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகரம் முழுவதும் அனைத்து வகையான பால் வகைகளையும் ஆவின் நிறுவனம் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து விநியோகித்து வருகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். சராசரியாக, சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 14.50 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுகிறது.ஜூன் 2025 காலகட்டத்தில் 14.46 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டது. 2026 ஜூன் காலகட்டத்தில் 14.82 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 36,000 லிட்டர் பால் கடந்த ஆண்டை விட அதிகமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என நுகர்வோர், பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என ஆவின் விளக்கம் அளித்துள்ளது.அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!Milk supply up by 36,000 litres compared to last year! Aavin's explanation