ஆர்பிஐ-யின் ரூ.10 லட்சம் ரொக்க வைப்பு விதிமுறை! யார், யாருக்கு பாதிப்பு?

Wait 5 sec.

ஒரு நிதியாண்டில், சேமிப்புக் கணக்கில் ரூ.10 லட்சம் வரைதான் ரொக்கமாக செலுத்த முடியும் என்ற மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை வலியுறுத்தி வரும் மத்திய அரசு, தனிநபர்கள், தங்களது வங்கிக் கணக்கில் பெரிய தொகையை வரவு வைப்பதைத் தடுக்கும் வகையில் இந்த புதிய விதிமுறையை உருவாக்கியிருக்கிறது.ஒவ்வொரு வங்கியும், தங்களது வாடிக்கையாளர் ஒருவர் ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக வரவு வைக்கும்போது அதனை தெரிவிக்க வேண்டும் என்பதே புதிய விதிமுறை. ஆனால், ஒரு நிதியாண்டில் சேமிப்புக் கணக்கு ஒன்றில் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஒருவரால் ரொக்கமாகச் செலுத்த முடியாதா? என்று கேட்டால் முடியும்.அதாவது, 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ரொக்கமாகச் செலுத்துவதைத் தடுக்கவோ, அதுவே அதிகபட்ச தொகை எனவோ நிர்ணயம் செய்யப்படவில்லை.ஆனால் அவ்வாறு வரவு வைக்கப்படும் ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட பணம் சட்டப்பூர்வமான வழிகளில் ஈட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு, வங்கிகள் ஆதாரத்தைக் கோரினால் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதிருக்கும் என்று கூறப்படுகிறது.அது என்ன ரூ.10 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றால், இந்தத் தொகைதான், பல்வேறு வரி தொடர்பான விதிமுறைகளில் ஒரு முக்கியமான வரம்பாக உள்ளது என்பதுதான்.அதாவது, நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த அறிக்கையிடல் விதிகளின்படி, ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளில் ஒருவர் மேற்கொள்ளும் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான ரொக்க வைப்புத்தொகைகளை வங்கிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். ஆர்பிஐயின் இந்த விதிமுறை, நடப்புக் கணக்குகள் அல்லது கால வைப்புத் திட்டங்களுக்குப் (time deposits) பொருந்தாது.குறிப்பிடத்தக்க விவகாரம் என்னவென்றால், இந்த ரூ.10 லட்சம் என்ற வரம்பு, ஒரே முறையில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வரவு வைப்பதை மட்டும் கணக்கில் கொள்ளாமல், ஆண்டு முழுவதும் செய்யப்படும் ரொக்க வைப்புத்தொகைகளின் மொத்த மதிப்பையும் கணக்கில் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.அதாவது, ஒருவர் முதலில் ரூ.3 லட்சம், பின்னர் ரூ.4 லட்சம், அதன்பிறகு அதே ஆண்டில் மேலும் ரூ. 3 லட்சத்தை ரொக்கமாக வங்கியில் செலுத்துவதாக வைத்துக்கொள்வோம், இந்தத் தொகைகள் தனித்தனியாகச் செலுத்தப்பட்டாலும், அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 10 லட்சமாகிறது. எனவே இதுவும் ஆர்பிஐ விதிமுறைக்குள் வரும்.எனவே ரூ.10 லட்சத்தை சிறிய தொகைகளாகப் பிரித்து ஒரு மாத காலம் அல்லது சில மாத காலம் இடைவெளிவிட்டு செலுத்துவது, இந்த விதிமுறையிலிருந்து தப்பிக்க உதவாது. அதாவது, பரிவர்த்தனை விவரம், வருமான வரித் துறையின் இணையதளத்தில் அவர்களது ஆண்டுத் தகவல் அறிக்கையில் (AIS) இடம்பெற்றிருக்கும்.ஆனால், அதற்காக இது சட்டவிரோதம் அல்லது அபராதம் செலுத்த வேண்டும் என்பது அர்த்தமாகாதாம். மாறாக, அந்த பணத்தின் வருபாய் மூலம் என்ன என்பதை நிரூபிக்க வேண்டியதுதான் அவசியம். எந்த வருவாய் அல்லது சொத்து விற்பனை அல்லது வங்கியிலிருந்து எடுக்கப்பட்டதா என்பது போன்ற விவரங்களையும் அதற்கான ஆவணங்களை வைத்திருப்பதுதான் அவசியம்.முற்றிலும் ரொக்கமாக வங்கியில் செலுத்தும் வைப்புக்குத்தான் இந்த விதிமுறை பொருந்தும். வங்கிக் கணக்குக்கு ரூ. 10 லட்சம் அல்லது அதற்கும் மேற்பட்ட தொகையை வரவு வைக்கப்பட்டால் இந்த விதிமுறையால் எந்த சிக்கலும் இல்லை. RBI's Rs 10 lakh cash deposit rule! Who will be affected?