திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபா் 12, 13, 14, 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஏழுமலையான் நவராத்திரி பிரம்மோற்சவங்களுக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் திருமலை தேவஸ்தானம் இன்று (அக்.7) காலை 10 மணிக்கு அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நாளொன்றுக்கு 12,000 டிக்கெட்டுகள் வீதம் 6 நாள்களுக்கு 72,000 டிக்கெட்டுகள் வெளியாகின.இந்த நிலையில், இணையத்தில் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் காலை 10 மணிக்குத் தொடங்கிய வெறும் 15 நிமிடங்களிலேயே 72,000 டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.அதுமட்டுமின்றி, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 9 மாதங்களில் உண்டியல் வசூல் மட்டும் ரூ. 1,129.04 கோடி கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.6 நிமிடத்தில் 1,600 மீ! ஊர்க்காவல் படையில் சேர சேலையில் வெறுங்காலுடன் ஓடிய பெண்!Tirupati Navaratri Brahmotsavam Darshan: 72,000 tickets sold out in 15 minutes