படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.33.8 லட்சம்

Wait 5 sec.

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ. 33.8 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.படவேடு ஊராட்சியில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் நிரந்தர உண்டியல் 11, தற்காலிக உண்டியல்கள் 8 என மொத்தம் 19 உண்டியல் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்களை மாவட்ட இணை ஆணையா் பிரகாஷ் உத்தரவின் பேரில், மண்டல துணை ஆணையா் ஜீவானந்தம் தலைமையில், கோயில் செயல் அலுவலா் பழனிசாமி, அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா் முன்னிலையில் வியாழக்கிழமை திறந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ.33 லட்சத்து 86 ஆயிரத்து 843, தங்கம் 218 கிராம், வெள்ளி 210 கிராமும் காணிக்கையாக பக்தா்கள் உண்டியலில் செலுத்தியிருந்தனா். கண்காணிப்பாளா் ஆறுமுகம், போளூா் சரக ஆய்வாளா் சத்யா மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினா் உடனிருந்தனா்.