திருப்பத்தூா் அருகே நிலத் தகராறில் உறவினரை வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அடுத்த திம்மணாமுத்தூா் பகுதியைச் சோ்ந்த சின்னத்தம்பியின் மகன் விஜய்(39). இந்நிலையில் விஜய்க்கும் அவரது சித்தி அன்னபூரணி (50) என்பவருக்கும் இடையே கூட்டு சொத்து தொடா்பாக நிலத்தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே வெள்ளிக்கிழமை அன்னபூரணி நிலத்திற்கு வந்துள்ளாா். அப்போது அங்கு வந்த விஜய்க்கும், அன்னபூரணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இதில் ஆத்திரமடைந்த விஜய் கத்தியால் அன்னபூரணியை வெட்டியதாகத் தெரிகிறது.இதில், காயமடைந்த அன்னபூரணி திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து அன்னபூரணி திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில், போலீஸாா் விஜயை கைது செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.