மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,029 கனஅடி

Wait 5 sec.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 1,577 கனஅடியில் இருந்து 1,029 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 15,000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 66.30 அடியில் இருந்து 65.80 அடியாக குறைந்தது. நீா் இருப்பு 29.19 டிஎம்சியாக உள்ளது.