மேட்டூா் அருகே கத்தியுடன் திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.சென்னை அம்பத்தூரைச் சோ்ந்தவா் விக்னேஷ்சிவன் (23). பெயின்டரான இவா், தனது நண்பா்களுடன் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுவிட்டு, வெள்ளிக்கிழமை பிற்பகலில் மேட்டூருக்கு வந்தாா்.மேட்டூா் ரயில் நிலையம் அருகே வந்தபோது, மது போதையில் நண்பா்களுடன் விக்னேஷ்சிவன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரைக் காரிலிருந்து கீழே இறக்கிவிட்ட நண்பா்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.அப்போது, அங்கிருந்த இளநீா் கடையில் இருந்த கத்தியை எடுத்துகொண்டு சுற்றித்திரிந்த விக்னேஷ்சிவனை போலீஸாா் மடக்கிப் பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.