பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பஞ்சாப் அணி விரைவில் அறிவிப்பு வெளியிடுமெனக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்நாட்டு அணிகளுக்கான பயிற்சியாளர் பதவிக்கு இருவருமே செல்லவிருப்பதால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கம் முதல் விளையாடி வருகிறது. இதுவரை கோப்பை வெல்லாத அணியாக இருக்கும் இதனை தற்போது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்படுகிறார். ஃபீல்டிங் பயிற்சியாளரான பிராட் ஹாடின், பந்துவீச்சு பயிற்சியாளரான ஜேம்ஸ் ஹோப்ஸ் தற்போது விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜேம்ஸ் ஹோப்ஸ் குயின்ஸ்லேண்ட் மற்றும் பிரிஸ்பேன் அணிக்கும் பிராட் ஹாடின் நியூ சௌத் வேல்ஸ்அணிக்கும் தலைமைப் பயிற்சியாளராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.முன்னதாக ரிக்கி பாண்டிங் உடன் தில்லி கேபிடல்ஸில் ஜேம்ஸ் ஹோப்ஸ் பணியாற்றினார். ஹாடினும் பாண்டிங் உடன் பணியாற்றி இருந்தார். அதனால்தான் இருவரையும் அவர் பஞ்சாப் கிங்ஸில் உடன் அழைத்து வந்திருந்தார். ஐபிஎல் 2025ல் இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற பஞ்சாப் 2026ல் முதல் பாதியில் 6 போட்டிகளில் வென்று, பின்னர் தொடர் தோல்விகளால் பிளே ஆஃப் செல்லாமல் வெளியேறியது. சுழல் பந்து பயிற்சியாளரும் விலகிய நிலையில், இந்த அணிக்கு தற்போது 3 காலிப் பணியிடங்கள் உருவாகியுள்ளன. இலங்கை டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய தனஞ்சய டி சில்வா! Hopes, Haddin leave Punjab Kings coaching staff; Franchise yet to confirm