காதலித்து ஏமாற்றிய பிக் பாஸ் முத்துக்குமரன்..! தற்கொலைக்கு முயன்ற இன்ஸ்டா பிரபலம்!

Wait 5 sec.

பிக் பாஸ் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் மீது இன்ஸ்டா பிரபலம் வஹிதா அக்தர் என்ற பெண் தன்னை காதலித்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் பர்தா அணிந்து நடன விடியோ வெளியிட்டு பிரபலமானவர் வஹிதா பேகம். இவர் தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்துள்ளதாக விடியோ வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார்.தொடக்கத்தில் மத ஆதரவாளர்களால் விமர்சனத்துக்கு உள்ளான வஹிதா இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்றார். சமீபத்தில் ஆண் நண்பர்கள் வேண்டுமென அறிவித்திருந்தார். அடுத்த சில நாள்களில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். வஹிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார். நேற்றிரவு வெளியிட்ட விடியோவில் தன்னை பிக்பாஸ் முத்துக்குமரன் ஏமாற்றி விட்டதாகவும் அதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும் பதிவிட்டிருந்தார். வஹிதாவின் பதிவுஇந்த நிலையில், முன்னதாக பதிவிட்ட விடியோக்களை நீக்கி புதியதாக வெளியிட்டிருந்தார். அதில் தன்னை மனம், உடல் ரீதியாக முத்துக்குமரன் ஏமாற்றியதாகக் கூறியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக பேசியே மயக்கிவிட்டார் எனவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். View this post on Instagram தற்போதும் மருத்துவமனையில் இருப்பதால் தங்களது ஆதரவாளர்கள் பயப்பட வேண்டாமென இன்ஸ்டா ஸ்டோரியில் வஹிதா பதிவிட்டுள்ளார்.வஹிதாவின் பதிவுகார்கில் போரில் பங்கேற்ற நானா படேகர்..! அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு ஓர் அறிவுரை! Bigg Boss's Muthukumaran deceived her in love... Instagram celebrity wahidha attempted suicide!