சட்டமும் நீதியும் இணையத் தொடரின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் நாயகனாக வெற்றிப் பெற்ற நடிகர்களில் கவனிக்கப்பட்ட சரவணன், பருத்தி வீரன் படம் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அறியப்பட்டார். அதன்பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து, நிறைய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இதனிடையே, சசிகலா பிரபாகரன் தயாரிப்பில் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவான சட்டமும் நீதியும் என்ற இணையத் தொடரில் நடித்திருந்தார். நாயகியாக நம்ரிதா நடித்திருந்தார்.குற்ற வழக்கு, சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் தொடர் கடந்தாண்டு வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில், சட்டமும் நீதியும் இணையத் தொடரின் இரண்டாம் பாகத்தினை, முதல் பாகத்தை எடுத்த பாலாஜி செல்வராஜ் இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் வழக்குரைஞராக நடித்த நடிகர் சரவணன், இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். இதில், மற்றொரு முக்கிய பாத்திரத்தில் வழக்குரைஞராக நடிகை வரலட்சுமி நடிக்கிறார்.மேலும் லாவண்யா மற்றும் பிரேம் குமார் ஆகியோரும் இந்தப் புதிய பாகத்தில் நடிக்கிறார்கள். 18 கிரியேட்டர்ஸ் பேனரின் கீழ் சசிகலா பிரபாகரன் இந்தத் தொடரை தயாரிக்கிறார்.சட்டமும் நீதியும் இணையத் தொடரின் இரண்டாம் பாகம் வரும் அக். 23 ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.The release date for the second part of the sattamum needhiyum web series has been announced.கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தேவின் அக்கா இணையத் தொடரின் வெளியீடு எப்போது?