புதுதில்லி: தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான எச்சிஎல் டெக், தென்னாப்பிரிக்காவில் தனது செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஜோகன்னஸ்பர்க்கில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சிறப்பு மையத்துடன் கூடிய புதிய தலைமையகத்தைத் திறந்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது.சாண்டனில் அமைந்துள்ள இந்த புதிய மையம், தென்னாப்பிரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் திறனை வலுப்படுத்தும்.புதிதாக நிறுவப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையத்தில், வாடிக்கையாளர்கள் செயற்கை நுண்ணறிவு சேவை மற்றும் தீர்வுகளை ஆராய உதவும். இதில் செயற்கை நுண்ணறிவு-சார்ந்த சேவை, துறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு தீர்வுகள், செயற்கை நுண்ணறிவு - பொறியியல், செயற்கை நுண்ணறிவு - ஃபவுண்ட்ரி, செயற்கை நுண்ணறிவு - ஃபேக்டரி மற்றும் ஆலோசனை உள்ளிட்ட சேவைகள் இதில் அடங்கும்.தொழில்நுட்பத் வல்லுநர்களை வளர்ப்பதற்கும், நாட்டின் டிஜிட்டல் பணியாளர்களின் திறனை வலுப்படுத்துவதற்கும் ஒரு பிரத்யேகப் பயிற்சி மையமாகவும் இந்த மையம் செயல்படும்.HCLTech opening a new regional headquarters in Johannesburg.வட்டி விகிதம் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!