ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்தி

Wait 5 sec.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று (அக். 7) தெரிவித்தார். ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தொண்டர்களுடனும் இந்தியா கூட்டணி எம்.பி.க்களுடனும் பேரணி செல்ல முயன்றபோது வலுக்கட்டாயமாக காவல் துறை கைது செய்த பிறகு ராகுல் இவ்வாறு பேசினார். கைது செய்து வாகனத்தில் ஏற்றப்பட்ட பிறகு, செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசியதாவது:ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை நாங்கள் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை. இது இந்நாட்டின் மிகப்புனிதமான ஒன்றைப் பாதுகாப்பதற்கான போராட்டம். எங்களைத் தடுக்க நரேந்திர மோடியாலும் அமித் ஷாவாலும் எதுவும் செய்ய முடியாது எனப் பேசினார். தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்பட இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் பலர் கலந்துகொண்டனர்.பேரணி பாதியில் தடுத்து நிறுத்தப்பட்டதால், அகில இந்திய வானொலி நிலையத்தில் இருந்தவாறு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரவில் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தும் வகையில் காவல் துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று தில்லி ஜந்தர் மந்தரில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஜந்தர் மந்தருக்குள் நுழைய விடாமல் காவல் துறை தடுப்புகளை அமைத்திருந்தது. இந்தபோதும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் சாலையில் படுத்து போராட்டத்தில் தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் அரணாக நின்று பெண் எம்.பி.க்களை நெருங்க விடாமல் தடுத்தனர். ஒருகட்டத்துக்கு மேல் ராகுல் காந்தியை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். எம்பிக்கள் மீது தில்லி போலீஸார் தாக்குதல்? - சாலையில் படுத்து பிரியங்கா காந்தி தர்னா!protest will continue until Gyanesh Kumar steps down congress Rahul Gandhi