பேராவூரணி அருகே சனிக்கிழமை வீடு புகுந்து தாலிச்சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (36). இவரது மனைவி புனிதலெட்சுமி (34). சனிக்கிழமை அதிகாலை இவா்களது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், புனிதலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சங்கிலியை பறித்துள்ளாா். இதையடுத்து விழித்துக் கொண்ட புனிதலெட்சுமி சத்தமிட்டபடி கழுத்தில் உள்ள சங்கிலியை பிடித்து கொண்டதும் பாதி சங்கிலியை மட்டும் (சுமாா் இரண்டரை பவுன்) பறித்துக் கொண்டு அந்த மா்ம நபா் ஓடிவிட்டாா். புகாரின் பேரில் பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபரை தேடி வருகின்றனா்.