திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு!

Wait 5 sec.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு பக்தா்கள் வழிபடும் வகையில் பிரமாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை (அக். 11) தொடங்கி, அக். 19ஆம் தேதி சரஸ்வதி பூஜை, 20ஆம் தேதி விஜயதசமி வழிபாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருச்செந்தூா் கோயில் வசந்த மண்டபத்தில் அறங்காவலா் குழுத் தலைவா் ரா. அருள்முருகன் ஏற்பாட்டில், அவரது மனைவி பிரியா அருள்முருகன் மற்றும் குடும்பத்தினா் வண்ண வண்ண பொம்மைகளால் கொலு வைத்துள்ளனா். கொலுவில் நூற்றுக்கணக்கான பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. மேலும், மயில் மீது முருகன் கையில் வேல் ஏந்தி, போா் புரிவது போன்ற பிரமாண்ட சிலை வைக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா், அறங்காவலா்கள், இணை ஆணையா் ஆ. அருணாசலம், கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.