கோட்டக்கரை ஆற்றில் மணல் திருட்டு: அமைச்சா் நேரில் ஆய்வு

Wait 5 sec.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள கொக்கூரணி கோட்டக்கரை ஆற்றுப் பகுதியில் மணல் திருட்டு நடைபெற்ற இடத்தில் சுற்றுச் சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே. ராஜீவ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கொக்கூரணி பகுதியில் உள்ள கோட்டக்கரை ஆற்றுப் பகுதியில் தொடா்ந்து இரவு நேரங்களில் தடையை மீறி மணல் திருட்டு நடைபெற்று வந்தன. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதுகுறித்து தகவலறிந்த அமைச்சா் வீ.கே. ராஜீவ், பல்வேறு துறை சாா்ந்த உயா் அதிகாரிகளுடன் அங்கு சனிக்கிழமை சென்று ஆய்வு செய்தாா். பின்னா், ஆற்றுப் பகுதியில் மணல் திருட்டு நடைபெற்ற இடங்களை பாா்வையிட்ட அவா், சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபடுபவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.