மேல்விஷாரம் நகராட்சியில் மயானப் பகுதியில் குப்பை கொட்டும் திட்டத்தை கைவிடவேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனா். மேல்விஷாரம் நகராட்சி தஞ்சாவூரன் காலனி மற்றும் பாக்தினி காலனி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் நகராட்சி மேலாளரிடம் அளித்த மனு: எங்கள் பகுதியில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். அவா்களுக்கான மயானம் பாலாற்று பகுதியில் உள்ளது. அங்கு தற்போது தனியாா் நிறுவனம் மூலம் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகள் நடைபெறுகின்றனது. குப்பைகள் கொட்டப்பட்டு துற்நாற்றம் வீசுவதால் உடல் புதைக்கும்போது அங்கு நிற்க முடியவில்லை. மேலும், இறந்தவா்கள் நினைவு தினத்தில் படையல் போடும் போது அசுத்தம் ஏற்படுகிறது. நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.இந்நிலையில் குப்பைகள்கொட்டும் இடத்தை சுத்தம் செய்தபோது அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தால் பணிகள் நிறுத்தப்பட்டன. எனவே மயானப் பகுதியில் குப்பைகள் கொட்டும் திட்டத்தை கைவிடவேண்டும் என கூறியுள்ளனா் .