மும்பை: இந்தியாவில் மின்சார வாகன விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவாக 2026 செப்டம்பர் மாதம் 3.33 லட்சம் வாகனங்கள் விற்பனையானதாக 'ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு' தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18,559 ஆக இருந்த மின்சாரப் பயணிகள் வாகனங்களின் விற்பனை, இந்த ஆண்டு செப்டம்பரில் கிட்டத்தட்ட இருமடங்காகி 36,108 வாகனங்களாக உயர்ந்துள்ளது.மின்சார வாகனங்களின் மொத்த விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 74 சதவீதம் அதிகரித்து 3,33,364 வாகனங்களாக இருப்பதாக, 'ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு' தெரிவித்தது.பண்டிகைக் காலத் தேவை, குறைவான இயக்கச் செலவு, பல்வேறு வகையான வாகன மாடல்கள் மற்றும் 'பிரதமர் இ-டிரைவ்' திட்டம் மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் கிடைக்கும் ஆதரவு ஆகியவை இணைந்து, மின்சார வாகனங்கள் ஒரு மாற்றுத் தேர்வாக மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக பரிசீலிக்கும் ஒரு முக்கிய தேர்வாக மாறி வருவதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.செப்டம்பர் மாதம் மின்சார வாகனங்களின் மொத்த விற்பனை 3,33,364 ஆக பதிவானது. இந்தியாவில் ஒரு மாதத்தில் பதிவான மிக அதிகபட்ச மின்சார வாகன விற்பனை இதுவேயாகும். இது ஆண்டுக்கு ஆண்டு 74 சதவீத வளர்ச்சியைக் குறிப்பதோடு, மொத்த வாகன விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்களிப்பை ஓராண்டுக்கு முன்பு இருந்த 10 சதவீதத்திலிருந்து சுமார் 13 சதவீதமாக உயர்ந்துள்ளது.குறிப்பாக, மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 88 சதவீதம் அதிகரித்து 2,07,314 வாகனங்களாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.Electric passenger vehicle retail sales nearly doubled in September.தென் ஆப்பிரிக்காவில் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் எச்சிஎல்!