3-வது டி20: அபிஷேக் சர்மா அதிரடி;மேற்கிந்தியத் தீவுகளுக்கு 224 ரன்கள் இலக்கு!

Wait 5 sec.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 223 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இந்தூரில் இன்று (அக்டோபர் 11) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.அபிஷேக் சர்மா அதிரடி; மேற்கிந்தியத் தீவுகளுக்கு 224 ரன்கள் இலக்கு!முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 223 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா அரைசதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 30 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, இஷான் கிஷன் 37 ரன்கள், திலக் வர்மா 28 ரன்கள், நிதீஷ் குமார் ரெட்டி 21 ரன்கள், அக்‌ஷர் படேல் 20 ரன்கள் எடுத்தனர்.மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ராஸ்டன் சேஸ், ஷமர் ஜோசப் மற்றும் ஷமர் ஸ்பிரிங்கர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கீமோ பால் மற்றும் குடகேஷ் மோட்டி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடி வருகிறது.Batting first in the third T20 match against the West Indies, the Indian team scored 223 runs before being bowled out.வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிரான பந்துவீச்சு சவாலுக்கு காத்திருக்கிறேன்: நியூசி. வீரர்