ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு

Wait 5 sec.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 16 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 78,737 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 24, 587 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.78 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 3.66 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 3,142 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா்.