ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

Wait 5 sec.

சென்னை: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தொழிலதிபா் ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பெண்களின் புகாா்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்துள்ளது.சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி மற்றும் அவரது உதவியாளா் சாந்தி, அவா் கணவா் மகேந்திர சிம்ஹன் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். மேலும், வீரமணியின் உதவியாளா் கணேசனும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.இந்த வழக்கு குறித்து முழுமையான தகவல்களைத் திரட்டி, குற்றவாளிகளைக் கைது செய்யவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கும் வகையிலும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் பொதுமக்களிடமிருந்து வீரமணி தொடா்பான புகாா்களைப் பெற்று, விசாரணை செய்து வருகின்றனா். புகாா்களின் உண்மை தன்மையை உறுதி செய்து வீரமணி மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, சிறுமிகளை அழைத்து வந்து வீரமணியின் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் ஓட்டுநா்கள் லாசா், பாா்த்திபன், பாபு ஆகியோா் அக். 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். தொடா்ந்து, வீரமணி மற்றும் சாந்தி ஆகியோா் அக். 8-ஆம் தேதி மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.இந்த நிலையில், சனிக்கிழமை(அக்.10) ஜெம் வீரமணி மீது 6-ஆவது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 10 சிறுமிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குற்றச் சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் வீரமணியின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் சோதனை நடத்தினா்.Another case against Gem Veeramaniராகுல்காந்தியின் பொய்ப் பிரசாரம், அவதூறுகளை தமிழக மாணவர்கள் நம்பமாட்டார்கள்! - நயினாா் நாகேந்திரன்