தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் (அக். 13) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு அக்.16-ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஜன. 2-ஆவது வாரம் வரை நீடித்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதன் மூலம், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மொத்தம் சுமார் 430 மி.மீ. மழை பதிவானது.இதனிடையே, நிகழாண்டு தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை காலத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இதனால் ஏற்பட்ட நீர் பற்றாக்குறை காரணமாக குறுவை மற்றும் கார் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் கடல் பகுதியை நோக்கி நகர வாய்ப்புள்ளது.இதன் தாக்கத்தால், அக். 13-இல் தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயல் சின்னம் வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து, சுமார் 4 நாள்களில் அதாவது அக்.17-ஆம் தேதியில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் நடுவே, கரையை கடக்க வாய்ப்புள்ளது இதன்மூலம், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.The India Meteorological Department has stated that a new low-pressure area is likely to form over the southeast Bay of Bengal the day after tomorrow (October 13).ஆதிச்சநல்லூா் அகழாய்வு பகுதியில் மழை நீரில் சேதமுறும் முதுமக்கள் தாழிகள்!