புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தை தொடக்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் சி. ஜோசப் விஜய் நினைவுப் பரிசை வழங்கினார்.பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக். 11) சென்னை வந்துள்ளார். தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, விமான நிலையத்துக்கு சென்று முதல்வர் சி. ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.இதனைத் தொடர்ந்து, ரூ. 4,900 கோடியில் கட்டப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் விஜய் ஆகிய இருவரும் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.தொடர்ந்து, போரூர் புறவழிச்சாலை நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பிரதமர் மற்றும் முதல்வர் இருவரும் பயணித்தனர்.இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் நினைவுப் பரிசு ஒன்றை வழங்கினார்.பின்னர், சென்னை ஐஐடிக்கு பிரதமா் மோடி செல்கிறார். அங்குள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்கிறார். தொடர்ந்து, சென்னை ஐஐடியில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை அவர் பாா்வையிடுவார்.Chief Minister C. Joseph Vijay presented a memento to Prime Minister Narendra Modi, who inaugurated the new metro rail corridor.பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்!