குழந்தைகள் நாளையொட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் துண்டுகள் வழங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. ரூ.9.27 கோடியில் 61.84 லட்சம் கேக் துண்டுகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.ஒரு கேக் துண்டு 45 கிராம் இருக்கும் அளவிற்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் குழந்தைகள் நாள் விழா ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது.ஜவஹர்லால் நேரு, குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அதனால், அவரது மறைவுக்குப் பிறகு அவரது பிறந்த நாள் குழந்தைகள் நாளாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், குழந்தைகள் நாளையொட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கப்படவுள்ளது.Reports indicate that the Tamil Nadu government has decided to distribute cake to government school students on the occasion of Children's Day.சென்னை தனியார் உணவகத்தில் ராகுல் - விஜய்! ஒரே காரில் பயணம்!