நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு

Wait 5 sec.

நேபாளத்தில் புதி கண்டகி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள புதி கண்டகிஆற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நீர்மட்டம் பெருக்கெடுத்து பாய்ந்து கரையோரத்தில் இருந்த பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் கரையோரப் பகுதி மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஜகத் பகுதியில் ஆற்றங்கரையோரத்தில் இருந்த 5 முதல் 7 வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், ஆற்றின் கீழ்ப்பகுதியிலும் சில வீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிய வந்துள்ளன.நல்வாய்ப்பாக இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாலை 4 மணியளவில் ஆற்றில் திடீரென நீர்மட்டம் உயர்ந்து, இடி முழக்கம் போன்ற பயங்கர சப்தத்துடன் நீர் பெருக்கெடுத்து ஓடியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.கோர்கா மாவட்ட முதன்மை அதிகாரி தர்மேந்திர குமார் மிஸ்ரா கூறுகையில், சியுரிபாஸ் பகுதிக்கு மேலே ஏற்பட்ட நிலச்சரிவே இந்த வெள்ளப்பெருக்குக்குக் காரணம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றார். A sudden surge in the water level of the Budhi Gandaki River has swept away several houses in Gorkha, Nepal, prompting authorities to issue warnings and evacuation orders for settlements along the river on Sunday morning.சௌதி அரேபியா: விமான நிலையத்தின் மீது தாக்குதல்; 9 பேர் பலி, 300 பேர் காயம்